Tuesday, December 30, 2008

உன் மேல் கோபம்


நீ சாய்வதற்கு வைத்திருக்கும்
என் தோள்களில் யார் யாரோ
தூங்கி சாய்கிறார்கள்
என் வாழ்க்கை என்னும்
பயணத்தில்..
என் விழிகள் உந்தன்
வருகைக்காக மட்டும்
காத்திருக்கிறது..

உனக்காக காத்திருக்கும்
அத்தருணம் உன்மேல் கோபம்
கொள்ளதுண்டும்..
கொஞ்ச நேரம் கழித்து
ஏன் என தோன்றும்..
அப்போதெல்லாம்
உன்மேல் இருக்கும் அன்பு
இன்னும் அதிகமாகும்..
இல்லையில்லை..
என்னை உன் வருகைக்காக
தவிக்க விடு..
அன்பு அதிகரித்துக் கொண்டே
இருக்கும்..

3 comments:

புதியவன் said...

கவிதை அழகு ரசித்தேன்...

நட்புடன் ஜமால் said...

\\என்னை உன் வருகைக்காக
தவிக்க விடு..
அன்பு அதிகரித்துக் கொண்டே
இருக்கும்..\\

ரொம்பவும் தவிக்க விடாதிங்கோ

*இயற்கை ராஜி* said...

அழகு கவிதை